Advertisement

Responsive Advertisement

கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசியின் முக்கியத்துவமறிந்த மக்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாம் தடுப்பூசியை பெற்றனர்




 நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் இன்று முதல் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது.

சுகாதார திணைக்கள  வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், பொலிஸார், இராணுவம் அடங்களான முப்படையினர், பட்டதாரி பயிலுனர்கள், பிரதேச சமூக சேவை அமைப்புக்கள் அடங்கிய குழுவினரினால் இந்த இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொது கட்டிடங்கள், பாடசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது தடுப்பூசியை பெற கல்முனை பிராந்திய அரச அதிகாரிகள், 30 வயதிற்கு மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுவருகின்றனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இந்த இரண்டாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Post a Comment

0 Comments