Home » » இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பல தடைகள் - பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பல தடைகள் - பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

 


நாட்டில் இன்று முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்படி புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்று முதல் வீடு ஒன்றில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்ற போதிலும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமைப் போல செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களையும் சுட்டிக்காட்டியுள்ளர். அதன்படி, வணிக வளாகங்களுக்கு அதன் மொத்த வாடிக்கையாளர் திறனில் 25 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது,

பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும், உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்படுகிறது.

இதேவேளை, சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் இன்றிலிருந்து தடைசெய்யப்படும் என்பதுடன் நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் மூடப்படுகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |