பெரியகல்லாற்றைச் சேர்ந்த 63 வயது நபரொருவர் கொரோனா தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கடந்த புதன்கிழமை சுகயீனம் காரணமாக கல்முனை
ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் தொகை 08 ஆக அதிகரித்துள்ளதுடன் களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் இன்று உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் பத்து பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப் பணிமனையின் சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.இராஜேந்திரன் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
0 comments: