Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறுதி நேரத்தில் தலிபான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா - தாக்கி அழிக்கப்பட்ட 73 போர் விமானங்கள்

 


காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை செயலற்றதாக்கி விட்டதாக, அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி கென்னத் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்களால் மீண்டும் பறக்க முடியாது என்றும் தலிபான்களால் அவற்றை இயக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார்.

காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டனர் என கூறிய அவர், அவர்கள் கடைசியாக நாடு திரும்புவதற்கு முன்னர் தலா 10 லட்சம் டொலர் மதிப்புள்ள 70 இராணுவ ஆயுத கவச வண்டிகளையும், 27 Humvees இராணுவ டிரக்குகளையும் செயலற்றதாக மாற்றி விட்டனர் என தெரிவித்தார்.

அதே நேரம், காபூலில் இருந்து புறப்படும் வரை பாதுகாப்பு தேவை என்பதால், ரொக்கெட் எதிர்ப்பு கருவியான C-RAM மட்டும் அதே நிலையில் விட்டு வைக்கப்பட்டு அதன் பின்னர் செயலற்றதாக மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இறுதி நேரத்தில் அமெரிக்க இராணுவத்தின் இச் செயல்பாடுகள் தலிபான் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

Post a Comment

0 Comments