Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒரே நாளில் 209 கொரோனா மரணங்கள்- 4602 கொரோனா தொற்றாளர்கள்...!!

 


நாட்டில் நேற்றைய தினம் வெளியாக்கிய கொரோனா மரணம் தொடர்பான அறிக்கையின் படி நேற்று முன்தினம் மாத்திரம் 209 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 108 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 163 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை நேற்றைய தினம் மாத்திரம் 4602 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 412 370 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 351 069 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 53 353 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments