Home » » கிழக்கில் 03டெல்டா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!கடந்த 48 மணி நேரத்தில் 974தொற்றுகள் 17மரணங்கள்

கிழக்கில் 03டெல்டா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!கடந்த 48 மணி நேரத்தில் 974தொற்றுகள் 17மரணங்கள்

 


கிழக்குமாகாணத்தில் முதற்தடவையாக மூன்று டெல்டா கொவிட் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இந்த 3 டெல்டா நோயாளிகளும் அம்பாறை பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 48மணிநேரத்தில் 974தொற்றுகளும் 17மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்றும் கூறினார்.

நேற்றுமுன்தினம் 507கொவிட் தொற்றுகளும் 09மரணங்களும் ஏற்பட்டுள்ளன. நேற்றைய தினம் 467கொவிட் தொற்றுகளும் 07மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 230தொற்றுக்களும் 2மரணங்களும் சம்பவித்துள்ளன.

அம்பாறை பிரிவில் 127தொற்றுக்களும் 1மரணமும் இகல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 81தொற்றுக்களும் 6மரணங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 70தொற்றுக்களும்இ ஏற்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக தொற்றாளர்களாக 247 நபர்களும் கல்முனையில் அம்பாறையில் 81 கல்முனையில் 72 இதிருகோணமலையில் 67 எனவும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.

கடந்தவாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறிவருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருதமுடியும்.

399பேர் மரணம்!
கிழக்கில் இதுவரை 397கொவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இறுதிழயாக மட்டக்களப்பு 02 கல்முனை 05 அம்பாறை 01 என எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளது.
மொத்தமாக மூன்றாம் அலையின் பின் 18231 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். 372 மரணங்களும் மொத்தமாக 399கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையில் அதிக 152 மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 119பேரும் கல்முனையில் 87 அம்பாறையில் 41 எனவும் மரணங்கள் சம்பவித்துள்ளன.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் இசமூக இடைவெளிகளை பேணுதல் முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |