Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் - மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு - நால்வர் கைது


மட்டக்களப்பு வாழைச்சேனை கறுவாக்கேணி வீதி செம்மணோடையில் வைத்து ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் இன்று (16.07.2021) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிசாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 30550 மில்லி கிராமும் கேரள கஞ்சா 500 மில்லிகிராம் என்பன கைப்பற்றப்பட்டதுடன் இந்த வருடத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஐஸ் போதைப்பொருள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments