கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக போற்றப்படுகின்ற சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (25) காலை 5.00 மணிக்கு தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த 04 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா திருவோண நட்சத்திரத்தில் 25 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.
கொடியேற்றத்தினைத் தொடர்ந்து 21 நாட்கள் இவ்வாலய மகோற்சவமானது சுகாதார துறையினரின் வழிகாட்டல்களுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு ஆலய நிருவாகசபையினரினதும், உபயகாரர்களதும் பங்கேற்புடன் திருவிழாக்கள் நடைபெற்றது.
இவ்வாலய மகோற்சவத்தினை காண நாட்டில் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வழமையாக வருகைதருவதுண்டு, ஆனால் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வருட மகோற்சவத்தின் இறுதிநாள் தீர்த்தோற்சவமானது ஆலய பரிபாலன சபையினர் உள்ளிட்ட உபயகாரர்கள் அடங்களாக 150 பேர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்துகொண்டதுடன், தீர்த்தோற்சம் இனிதே நிறைவுபெற்றது.
0 Comments