Advertisement

Responsive Advertisement

இலங்கையில் இருந்து ஆயுததாரிகள் ஊடுருவ முயற்சி – தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

 


இலங்கையிலிருந்து ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதனையடுத்து, தமிழ் நாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து படகு மூலம் ஆயுததாரிகள் சிலர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்தே, தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த நபர்கள் குறித்த அடையாளம் மற்றும் அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தமிழக கடற்கரையை அடைவதற்கான எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க கடலோர காவல்படை ரோந்துப் பிரிவினரால் கடலில் அதிக கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ் தலைமையகத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments