ஏ.எச்.ஏ. ஹுஸைன்மட்டக்களப்பு கடற்படையினரின் உதவியுடன் களுவாஞ்சிகுடி கடற் பகுதியில் வைத்து தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடமிருந்து ஒரு வலை, ஒரு இயந்திரப்படகு, ஒரு என்ஜின், இரண்டு வெற்றிகள், போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், கைப்பற்றிய பொருட்களை செவ்வாய்கிழமை(01) மாலை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்து நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய கொவிட் சூழல் காரணமாக தமது முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலுள்ள போதிலும் மீனவர்களின் நலன்கருத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்
0 Comments