Advertisement

Responsive Advertisement

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் மனிதாபிமான பணிகள்...!!


 (சர்ஜுன் லாபீர்)

நாடு பூராகவும் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொழிலின்மையால் அன்றாடம் மிகவும் கஸ்டப்படும் வறுமைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை சேர்ந்த சுமார் 35 குடும்பங்களுக்கு நேற்று (18) உலர் உணவுப் பொதிகள் கல்முனை பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுனனின் முயற்சியினால் களுவாஞ்சிக்குடி பல்நோக்கு கூட்டிறவு சங்கத்திலும் வெல்லாவெளி ( படுவாங்கரை) பிரதேச செயலகத்திலும் வரவழைத்து பகிர்ந்தளிக்கப்பட்டது.

டாக்டர் சுகுனன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தன்னுடன் பாடசாலை காலத்தில் ஒன்றாக கல்வி கற்ற நண்பி ஒருவரினாலும் மற்றும் மருத்துவ பீடத்தில் ஒன்றாக படித்த நண்பன் ஒருவரினாலும் வழங்கப்பட்ட நிதி உதவினையினைக் கொண்டு மேற்படி உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments