Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காத்தான்குடியில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியில் போதையூட்டும் மாத்திரைகள் ! இருவர் கைது !

 


காத்தான்குடியில், அனுமதிப் பத்திரமின்றி இயங்கி வந்த பாமசியொன்றை, விஷேட அதிரடிப் படையினர், நேற்று (18) வெள்ளிக்கிழமை (18) இரவு திடீரென சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.


அந்த தேடுதலின் போது, அந்த பாமசியிலிருந்து போதையூட்டக்கூடிய, மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், பாமசி உரிமையாளரும் மற்றுமொருவருமென இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த பாமசி முற்றுகையிடப்பட்டு, சுற்றிவளைத்து தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

அத்துடன், வைத்தியர்களினால் மருந்து துண்டு இல்லாமல் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தமையும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

இதன் போது உணவு மற்றும் மருந்தக பரிசோதகர் சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டதுடன் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. எல். எம். நபீல். காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். பஷீர் ஆகியோர் ஸ்த்தலத்துக்கு சென்று விசாரணைகளை மேற் கொண்டனர்

பாமசிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments