Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஓய்வு பெற்ற முன்னாள் பட்டிருப்புக் கல்வி வலய உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பா ளர் நாகராசா அவர்கள் இன்று காலமானார்

 


ஓய்வு பெற்ற முன்னாள் பட்டிருப்புக் கல்வி வலய உடற் கல்வி உதவிக் கல்விப்  பணிப்பா ளர் நாகராசா அவர்கள் இன்று காலமானார். அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.




இங்கினியாகலையைப் பிறப்பிடமாகவும், பெரியகல்லாற்றினை வசிப்பிடமாகவும் கொண்டவரும் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நீண்ட காலமாக உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற நல்லதம்பி- நாகராசா அவர்கள் இன்று (06.06.2021) காலமானார். 

தனது பதவிக் காலத்தில் பட்டிருப்பு வலய பாடசாலை மாணவர்களை விளையாட்டுத்துறையில் வழிப்படுத்தி தேசியமட்டம் வரை மாணவர்களை பங்கேற்க ஊக்கப்படுத்தி மாணவர்கள் வெற்றிப் பதங்கங்களை பெற தன்னை அர்ப்பணித்து சேவையாற்றியவராவார். இது மாத்திரமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட சாரண ஆணையாளாராக இருந்து பாடசாலைகள் தோறும் சாரண அணிகளை உருவாக்குவதில் பாடுபட்டுழைத்தவராவார்.

தனது கடமைகளை கண்ணியமாகவும் நேர்மையுடனும் கட்டுப்பாட்டுடனும் உரிய காலவேளையில் செய்து முடிக்கும் திறன்வாய்ந்தவராகவும் காணப்பட்டார். ஓய்வு காலத்தின் பின்பும் சாரணியத்திற்காகவும், சமூக சேவைகளுக்காகவும் தனது இறுதி மூச்சிவரை உழைத்த பெறுமதி வாய்ந்த நபரான நல்லதம்பி- நாகராசா அவர்களின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பேரிழப்பாகும்.


ஊர்  மெச்சும்  நல்லவனே  
உயரமாய்  வளர்ந்தவனே 
உடற்கல்வியோடு  சேர்த்து  
ஒழுக்கத்தையும்  தந்தவனே  
 உறுக்கி  நீ  பார்த்தால்  
ஓடினோமே  அன்று நாங்கள் 

அன்பான  ஆசானே  
அரவணைத்த  நல்லவனே  
அதிகமாய்  பேசிடாத  
அதிகார  அம்சம்  கொண்டவனே  

உதய  சூரியனே   நீ  
உழைத்தது  போதுமென்று  
 உறங்கித்தான்  போனாயோ  
 உத்தமா  உன்  ஆத்மா  
புனிதமாய்  சாந்தியடைய  
பூமாரி  பொழிகின்றோம் 
பொன்வண்ண  கண்ணீரை   😢😢

Post a Comment

0 Comments