Home » » நீண்ட காலமாக சிதைந்திருந்த கல்முனை பொது மயான மதில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிதைந்திருந்த கல்முனை பொது மயான மதில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)




அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள தமிழ் இளைஞர் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சுமார் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ஏ.நிமலன் தெரிவித்தார்.


இன்று (18) குறித்த கல்முனை பொது மயான மதிலை புனரமைப்பு செய்வதற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி மாகாண பணிப்பாளர் நா.தனஞ்ஜெயன் மற்றும் தமிழ் இளைஞர் ஒன்றிய பிரதிநிதிகள் இணைந்து மேற்கொண்டு பார்வையிட்டனர்.



குறித்த மதிலானது 250 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையானதாக காணப்பட்டதுடன் கடந்த 12.02.2021 அன்று இடம்பெற்ற  ஒன்றியத்தின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்தின் படி கிழக்கு மாகாண கிராமஅபிவிருத்தி மாகாண பணிப்பாளர் நா.தனஞ்ஜெயனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் இத்திட்டம் நிறைவேற ஆதரவளித்த கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர்  ஜெ.அதிசயராஜ் பொறியியலாளர் கென்றி அமல்ராஜ் துறைசார் திணைக்கள உத்தியொகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |