Advertisement

Responsive Advertisement

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நேரடி விஜயம்...!!


 (சர்ஜுன் லாபீர்)

நாட்டில் தற்போதைய கொவிட்-19 அசாதாரண சூழ் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட அனுமதி வழங்கல் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துகுரிய அனுமதி வழங்கல் போன்ற செயற்பாட்டுகளை கண்காணிப்பு செய்வதற்கும் அரசாங்கத்தின் 5000/-ரூபாய் கொடுப்பவினை துரிதபடுத்துவது சம்மந்தமாக கலந்துரையாடுவதற்கும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நேரடியாக விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே லியாக்கத் அலி,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கணக்காளர் யூ.எல் ஜவாஹீர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் கே.யாஸீன்பாவா ஆகியோர் காணப்படுகின்றனர்

Post a Comment

0 Comments