Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அபிவிருத்தி என்ற போர்வையில் கொள்ளை - போட்டுடைத்த சாணக்கியன்


அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர்.

இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர்கள் மறந்து செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Aqa பிரதேச சபையின் தவிசாளர், கித்துள் பிரதேச சபை உறுப்பினர்களான வர்ணன், சிவானந்தன் மற்றும் ஊர்மக்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த பகுதி மக்களினால் மணல் லொறிகள் இந்த வீதி ஊடாக பயணிப்பதை நிறுத்துமாறு கோரி மனு ஒன்றும் இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments