Advertisement

Responsive Advertisement

இராணுவத்தினரால் பெரியநீலாவணையில் வீடமைப்பு திட்டம் முன்னெடுப்பு

 


செ.துஜியந்தன்

கல்முனை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.





இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் 241 ஆவது படையணியின் பிரிகேடியர் விமல்ஜனக விமலரத்ன வழிகாட்டலில் சிவில்சமுகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையிலான உறவை பேணுவதற்கான பல்வேறு நலத்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணைக்கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான கைலாயப்பிள்ளை நாகராசா என்பவரின் குடும்பத்திற்கு எட்டு(08) இலட்சம் ரூபா பெறுமதியான வீடமைத்துக்கொடுப்பதற்க்கு இராணுவத்தினர்முன்வந்துள்ளனர்.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  டைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் விஜயக்கோன், அக்கரைப்பற்று இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கேணல் புஸ்பஸ்ரீ, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உட்பட இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த வீடானது மூன்று மாதகாலத்திற்குள் கட்டிமுடிக்கப்டவுள்ளதாக கல்முனை பிரதேச இராணுவமுகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments