மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் திங்கட்கிழமை(14) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அதுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், துவிச் சக்கர வண்டி ஒன்று வீதியைக் குறுக்கீடு செய்ய முற்பட்டபோது இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மருதமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய அப்துல் ஹமீட் றாசிக் என்பவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments