Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆபத்தான கட்டத்தில் இலங்கை! 98 வீதம் சிவப்பு வலயங்களாக மாறிவிட்டதாக எச்சரிக்கை

 


இலங்கையில் உருவாகியுள்ள மூன்றாவது அலையில் 98 வீதமான பகுதிகள் சிவப்பு வலயமாக மாறியுள்ளது என்றும் இது ஆபத்தான நிலைமையாகும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் நாளுக்கு நாள் கொவிட் நோயாளர்கள் அதிகரிக்கின்ற நிலையில் கொவிட் நிலவரம் நாளுக்கு நாள் வேறுபடலாம். இவ்வாறு வேறுபடும்போது இதன் முகாமைத்துவமும் நாளுக்கு நாள் வேறுபடும்.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முடிந்தவரை பயணக்கட்டுப்பாடுகளை விதித்தாவது கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மரணங்களின் எண்ணிகையை குறைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

கொவிட் தொற்றின் நிலைமை குறைவடையும் போது இறுக்கமான நடைமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படலாம். மோசமடையும் பட்சத்தில் இறுக்கமான நடைமுறைகளை மேலும் விஸ்தரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Post a Comment

0 Comments