Home » » இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!

இலங்கையின் பணவீக்கம் 4.5 சதவீதமாகவும் உணவு விலைகள் 9.9 சதவீதமாகவும் உயர்வு!

 


இலங்கையின் பணவீக்கம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோகப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன.


இது கடந்த ஆண்டில் இருந்து மார்ச் மாதம் வரைக்கும் 3.9 சதவீதமாக இருந்தது என்றும் அதே நேரத்தில் உணவு விலைகள் 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) கடந்த மாதம் பதிவாகிய 138.8 புள்ளிகளிலிருந்து 1.1 சதவீதம் அதிகரித்து மே மாதத்தில் 140.3 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இதேநேரம் ஏப்ரல் மாதத்தில் 9.0 சதவீதமாக இருந்த உணவுக் குறியீடு மே மாதத்தில் 9.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்னர் பணம் அச்சிடப்பட்டாலும் இலங்கை ரூபாய் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுமார் 182 லிருந்து 2020 மே மாதத்திற்குள் சுமார் 200 ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் 2021 ஆம் ஆண்டில் கடன் பெற்றுக்கொள்ள தொடங்கியுள்ள நிலையில் இந்த வருடம் மே மாத இறுதி வாரத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |