Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!

 


பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சிலாபம் - மஹாவெவ - குடாவெவ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்புடையோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே குறித்த 12 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய இந்த 12 பேரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments