நாடளாவிய ரீதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு இடை நிறுத்தபட்ட அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த இறுதி முடிவு இந்த வாரம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலுக்கு கல்வியாளர்கள் உட்பட மருத்துவ நிபுணர்களை அழைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments