Home » » காலியில் நிரம்பி வழியும் மருத்துவமனை - வீட்டில் தங்கவைக்கப்படும் கொரோனா நோயாளிகள்

காலியில் நிரம்பி வழியும் மருத்துவமனை - வீட்டில் தங்கவைக்கப்படும் கொரோனா நோயாளிகள்

  


காலி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலை நிரம்பி வருகிறது.

இந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களை, அவர்களது வீடுகளுக்குள்ளேயே தங்க வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் சந்திம சிறிதுங்கவை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஹபராதுவ பகுதியில் 36 தொற்றாளர்களும், அம்பலாங்கொடை பகுதியில் 35 தொற்றாளர்களும், இமதுவ பகுதியில் 13 தொற்றாளர்களும், ரத்கம பகுதியில் 09 தொற்றாளர்களும், காலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 தொற்றாளர்களும், போபே பொத்தல பகுதியில் 08 தொற்றாளர்களும், கரந்தெனிய பகுதியில் 04 தொற்றாளர்களும், பலபிட்டிய பகுதியில் 03 தொற்றாளர்களும், ஹிக்கடுவ பகுதியில் 4 தொற்றாளர்களும், வெலிவிடிய பகுதியில் 2 தொற்றாளர்களும், உடுகம பகுதியில் 2 தொற்றாளர்களும், அக்மிமன மற்றும் எல்பிட்டிய பகுதியில் இரண்டு தொற்றாளர்களுமாக 114 தொற்றாளர்கள் இவ்வாறு வீடுகளுக்குள்ளேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தென் மாகாணத்தில் 8 கொவிட் சிகிச்சை நிலையங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 1400 கட்டில்கள் காணப்படுவதாகவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கட்டில்கள் அனைத்திலும், கொவிட் தொற்றாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். காலி மாவட்டம் மாத்திரமன்றி, பல்வேறு பகுதிகளிலுள்ள தொற்றாளர்கள், காலிக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், சில நோயாளர்களை கொவிட் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |