Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார்த்தை!!

 


செங்கலடி நிருபர் சுபா)

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்ஸவுடன் வியாழேந்திரன் மீண்டும் பேச்சுவார்த்தை!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது தொடர்பாக இன்று (03.05.2021) அமைச்சர் சமல்ராஜபக்ஸ அவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை இடம்பெற்றுள்ளது .

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டிய நியாயத்தை எடுத்து கூறியுள்ளதுடன், தேவையான ஆவணங்களையும் எழுத்து மூலம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியழேந்திரன் சமர்ப்பித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்ட அமைச்சர். இது குறித்து தான் கவணம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments