Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் தீவிரவாத வகுப்புக்கள் - ஒருவர் சிக்கினார்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் 2018 டிசம்பர் மாதமளவில் முத்தூர் பகுதியில் தீவிரவாத வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 38 வயதுடைய சந்தேகநபர் முத்தூரில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர் சஹ்ரான் ஹாசிமின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

முத்தூர் பகுதியில் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறான தீவிரவாத வகுப்புக்களை நடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்படுவார் என்றும் அஜித் ரோஹண கூறினார்.

மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கேகாலை மற்றும் பொலன்னறுவையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சஹ்ரானின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அவர்கள் பல்வேறு குற்றங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments