Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை மாவட்டத்தின் உஹன சந்தியில் கார் விபத்து!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான அம்பாறை மாவட்டத்திற்குபட்ட உஹன சந்தியில் வெள்ளிக்கிழமை(14) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் கார் ஒன்று பலத்த சேதத்திற்குட்பட்டதோடு அதனைச் செலுத்திச் சென்ற சாரதி எதுவித பெரிய காயங்களும் இன்றி தெய்வாதீனமாக உயிர் பிளைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

அம்பாறை – கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் உஹன சந்தியில் வைத்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையை விட்டு விலகி அருகிருந்த மின்கம்பத்தில் மேதியுள்ளதனாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் உஹன பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments