மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகதித்துள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பெரியபோரத்தீவு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவின் மூன்றாவது அலையில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகதித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தொடர்ந்தும் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென்றும், அதேவேளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கனவமாக செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்
0 Comments