(ஷமி மண்டூர்)ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அந்தோனியார் வீதி களுவஞ்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நடராசா-விதுசாஜினி என்பவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு வருடகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடைதொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த நிலையில் சம்பவ தினமான நேற்று மே தின விடுமுறை என்பதனால் தனது வீட்டில் மதிய உணவினை உண்டு விட்டு தனது படுக்கை அறைக்கு சென்று உறங்கியிருக்கின்றார்.
பின்னர் அவரின் தாயார் தேனீர் கொடுப்பதற்காக அவரின் படுக்கை அறையினை தட்டிய போது எவ்விதமான சத்தமும் வராத நிலையில் கதவினை கத்தியால் உடைத்து திறந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இவரின் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமே என விசாரணைகளின் போது அறிய முடிந்துள்ளது.
ஏறாவூர் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments