(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கிழக்கு மாகாணத்தில் தென்கொரிய வேலை வாய்ப்பிற்கான கொரியமொழிப் பயிற்சி வகுப்புக்களை ஆரம்பிக்க கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ரிஸ்லி முஸ்தபா ஏற்பாடு செய்துள்ளார்.
தென்கொரியாவில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு அதிக தொழில் வாய்ப்புகள் காணப்படுவதால் அதில் கிழக்கு மாகாண இளைஞர்கள் இணைந்து கொள்வதில் கொரியமொழி ஒரு பிரச்சனையாக இருப்பதால் அம்மொழியினை கற்பதற்கு எமது பிரதேசத்திலேயே அந்த வசதியையும் வாய்ப்பினையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரிய மொழி பயிற்சி நெறிகளை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் (SLYC) நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை றிஸ்வி முஸ்தபா சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.
பயிற்சி நெறிகளை மிக விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
0 Comments