Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டுப்படுத்தப்பட்டது இரண்டாம் தவணை விடுமுறை


இம்முறை இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்kபொன்றில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்திற்கான பாடசாலைகளின் இரண்டாவது வாரம் சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 15 மாணவர்கள் உள்ள வகுப்பொன்று வாரத்தின் எல்லா நாட்களும் நடைபெறவேண்டும். அத்துடன், 16 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட மாணவர்களைக் கொண்ட வகுப்பொன்று 2 குழுக்களாகப் பிரித்து ஒரு வாரத்திற்கு ஒருமுறை என்றவாறு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முப்பது மாணவர்களை விட கூடிய வகுப்புக்கள் மூன்று குழுக்களாகப் பிரித்து சமனான எண்ணிக்கையிலான நாட்களில் வகுப்புக்களை நடத்த வேண்டும்.

மேலும் நேற்றைய தினம் அதிகளவிலான பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை உயர் மட்டத்தில் காணப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

Post a Comment

0 Comments