நாட்டை முழுமையாக முடக்கும் திட்டமில்லை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுமையாக முடக்கப்படுமா என்று பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பின்போது விளக்கிய அவர்,
நாட்டை முழுமையாக முடக்கும் திட்டம் எதுவும் எடுக்கப்படவில்லை. அதேபோன்று போக்குவரத்து கட்டுப்பாடுகள் எவையும் விதிப்பதற்கு முடிவு செய்யப்படவில்லை.
ஆனால் மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். தேவைப்பட்டால் கொரோனா வைரஸ் தீவிர பரவல் உள்ள இடங்களை மட்டும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 Comments