Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


சாய்ந்தமருது பிரதேசத்தின் முன்னணி விளையாட்டு கழகங்களுள் ஒன்றான பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும் கழக உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்வும் அண்மையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
கழகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கழகத்தின் ஆயுட்கால செயலாளர் எஸ்.எம்.கான் உள்ளிட்ட கழக முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் சீருடையினை அன்பளிப்பு செய்த நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Post a Comment

0 Comments