தேசிய சமாதான பேரவையின் பல்சமய தலைவர்கள் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
மதங்கள், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினையும் சமாதானத்தினையும் ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று செவ்வாய்கிழமை மாலை விஜயம் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பல்சமய தலைவர்கள் அடங்கிய குழுவினர் ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சேதமைத்துள்ள சீயோன் தேவாலத்தினை பார்வையிட்டதுடன், ஆலய நிர்வாகிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். சமாதான பேரவை முக்கியஸ்தர்களான கொரகொல்ல பியதிஸ்ஸ தேரர் கெசல்வத்துகொட சமநலவத்துகெர்ட தேரர், மௌலவி எச்.எம். சித்தீக், எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமி உள்ளிட்ட சர்வமத தலைவர்களும் அடங்கியிருந்தனர்.
0 Comments