Advertisement

Responsive Advertisement

உயிர்நீத்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவு தினம் அம்பாறையில் அனுஸ்டிப்பு



(   எம்.ஐ.எம்.அஸ்ஹர்  )

157 வது பொலிஸ் வீரர்கள் தினத்தை நினைவுகூறும் வகையில்  அண்மையில் நினைவு தின நிகழ்ச்சியொன்று  இங்கினியாகல வீதியிலுள்ள படை வீரர்களின் ஞாபகார்த்த திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 அம்பாரா மாவட்டபிரதி பொலிஸ் மாஅதிபர்  டி.ஐ.ஜி. அயசா கருணாரத்னவின் தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில்  சர்வ மத பெரியார்களும் கலந்து கொண்டிருந்தனர். பொலிஸ் சேவையில் பணியாற்றியபோது இறந்த பொலிஸ் அதிகாரிகளின் நினைவாக பொலிஸ் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்ததுடன்   போர் வீரர்களின் நினைவு தூபிகளுக்கு முன்னால் மலர்வளையங்கள் வைக்கப்பட்டு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அம்பாறை  வித்யானந்தா பிரிவேனா இயக்குநர் கிரிந்திவெல  சோமரத்ன நாயக்க தேரர்   சடங்குகளை நடத்தினார்.
அம்பாறை மாவட்ட பொலிஸ்  மாஅதிபர்  எஸ்.எஸ்.பி ஜெயந்த ரத்நாயக்க, அம்பாறை பொலிஸ்  நிலைய  பொறுப்பதிகாரி  லசன்னதா தடல்ல உட் பட உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோஸ்தர்களின்  உறவினர்களும்  கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments