Advertisement

Responsive Advertisement

வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம்


எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  வவுனியா மரக்காரம்பளை கணேசபுரம் பகுதிக்கான 2 கிலோமீட்டர் வீதி 58.2 மில்லியன் ரூபாய் செலவில்  புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு உத்தியோகப்பூர்வமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.03.2021)ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் திரு. முரளிதரன், பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு. மஹேந்திரன்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள்  எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments