Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தபால் ஊடான மருந்து விநியோகம் நிறுத்தம்!

 


வைத்தியசாலைகளில் மாதாந்தம் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகளை தபால் ஊடாக வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (10) முதல் நிறுத்தப்பட்டுள்ளது என, தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.


கொரோனா தொற்று நிலை காரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 17 இலட்சம் மருந்துப் பொதிகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக 170 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டு வரப்படவுள்ளதால் மருந்துப் பொதிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் கூறியுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் தபால் ஊடான மருந்து விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தபால் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Post a Comment

0 Comments