Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கத்திமுனையில் தாலியை அபகரித்துச் சென்ற திருடர்கள்!

 


யாழ்.வடமராட்சி, பருத்தித்துறை, புற்றளைப் பகுதியில் வீடொன்றில் நுழைந்த திருடர்கள் கத்திமுனையில் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகா சிவராத்திரியையொட்டி வீட்டில் குடும்பஸ்தர் கோயிலுக்குச் சென்ற நிலையில் நேற்று மாலை 6.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புற்றளையில் வசிக்கும் வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த, வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபரின் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

முகத்தை மறைத்து முகமூடி அணிந்து கத்தியோடு உள்நுழைந்த இருவரைக் கண்டதும், வீட்டில் இருந்த அதிபரின் மனைவியும் இரு மகள்மாரும் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அதிபரின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை அபகரித்துக்கொண்டு திருடர்கள் தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments