Home » » கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று!

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதையடுத்து 3434 அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்அ.லதாகரன் தெரிவித்தார்.


பேலியகொடை மீன்சந்தை கொத்தனியையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் பிசிஆர் பரிசோதனை மூலம் கிழக்கில் தம்பலகாமத்தில் ஒருவரும், நிந்தவூரில் ஒருவரும், செங்கலடியில் ஒருவரும், ஏறாவூரில் இரண்டுபேரும், காத்தான்குடியில் இரண்டுபேரும், கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும், உகணனையில் நான்குபேரும், தமணயில் ஒருவர் உட்டபட 13 பேர் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 733பேரும், மட்டக்களப்பில் சுகாதார பிராந்தியத்தில் 909 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 321 பேரும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 1471 பேர் உட்பட கிழக்கு மாகாணத்தில் 3434 பேராக கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 8136 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 17122 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 19954 பேருக்கும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 27871 பேருர் உட்பட 73083 பேருக்கு பிசிஆர் பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 253 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை அம்பாறை . காத்தான்குடி, திருகோணமலை, உப்புவெளி, ஏறாவூர், உப்புவெளி, கிண்ணியா, உகண. ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வலயங்களாக சுகாதார பிரிவினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது எனவே கோரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதுடன் பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |