Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

 


உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நட்டஈட்டை செலுத்தவேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவரும் அரசும் இந்த நட்டஈட்டை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவின்படி வாழ்நாள் முழுவதும் செவிப்புலனை இழந்த மாணவனுக்கு, அரசும் ஆசிரியரும் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு 5 இலட்சம் ரூபாவையும் ஆசிரியர் 1 இலட்சம் ரூபாவையும் செலுத்த வேண்டும் இந்த நட்டஈட்டுத்தொகையை இரண்டு தரப்பும் 6 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்டவிரோதமானது. அத்துடன் ஒரு மாணவரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

உடல் ரீதியான தண்டனை என்பது உடல் மற்றும் மனரீதியானதாக இருக்கலாம் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உடல் ரீதியான தண்டனை குறித்த அணுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியமாகும் என கூறியுள்ளார்.

மாணவர்களை தாக்குவது அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்ற எண்ணத்தை சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

மாத்தறையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவருக்கு தண்டனை வழங்கியதன் மூலம் அவர் ஆயுள்முழுவதும் செவிப்புலனை இழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் முடிவிலேயே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments