( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கல்லடி ஆஸ்ரமத்தின் பகவான் இராமகிருஸ்ண பரமஹம்சரின் ஆலயக் கும்பாபிசேகப்பெருவிழா நேற்று(பெப்.1) திங்கள் காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.
கல்லடி ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் மேலாளர் சுவாமி ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் மஹராஜ் மற்றும் உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் மஹராஜ் முன்னிலையில் ராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் புதிய ஆலயத்தை அதிகாலை சுபவேளையில் திறந்து வைத்தார்.
முன்னதாக ஆஸ்ரமத்திலுள்ள பழைய பிரார்த்தனை மடத்திலிருந்து சுவாமிகள் சகிதம் தெய்வத்திருமூவரான பகவான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதா சுவாமி விவேகானந்தர் ஆகியோரது திருவுருவப்படங்கள் தாங்கி ஊர்வலமாக புதிய ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இ.கி.மிசன் கொழும்பு சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீயும் கலந்து சிறப்பித்தார்.
ஆலயத்தின் கும்பாபிசேகக்கிரியைகளை காரைதீவு கண்ணகை அம்மனாலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் நடாத்தினார்.
அதிகாலையில் புதிய ஆலயம் திறந்து வைக்கப்பட்டதும் உள்ளே திருமூவருக்கு சுவாமிகளும் குருக்களும் தீபாராதனை காட்டியனார்கள். வேதபாராயணம் ஓதப்பட்டது.
ஆரதி புஷ்பாஞ்சலியைத்தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று ஸ்ரீ சண்டி (தேவீ மாஹாத்மியம்) பாராயணம் மற்றும் பூஜையை இ.கி.மிசன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மகராஜ் நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காணொளியில் இந்தயாவிலிருந்து ஆசியுரைகள் வழங்கப்பட்டன.
கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் சுகாதார முறைப்படி கலந்து கொண்டனர்.

0 comments: