Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற மத்திய தர (மட்டம் - 2) உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி வகுப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்ட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் கே. கருணாகரனின் ஏற்பாட்டில் இப்பயிற்சி நெறி செவ்வாய்க்கிழமை 02.02.2021 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

150 மணித்தியாலங்கள் எனும் 3 மாத கால அளவைக் கொண்ட இப்பயிற்சி வகுப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற மத்திய தர (மட்டம் - 2) உத்தியோகத்தர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்குள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது கடமைகளையும் இலகுபடுத்தி கொள்ள வழிவகுப்பதாகவும் தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருவதாக அதில் பயிற்சி பெறும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments