Home » » கடும் மழைக்கு மத்தியிலும் உறவுகளைத் தேடி தீச் சட்டி ஏந்தி சர்வதேச நீதி கோரும் பேரணி!

கடும் மழைக்கு மத்தியிலும் உறவுகளைத் தேடி தீச் சட்டி ஏந்தி சர்வதேச நீதி கோரும் பேரணி!

 


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களால் தீச்சட்டி பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியான தற்போது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

பேரணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். பேரணி ஆரம்பித்த போது கன மழை ஆரம்ப்பித்திருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாது பேரணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், தமக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத் தரவேண்டும் என்பது சர்வதேசத்தில் உள்ள அனைவரினது நெஞ்சங்களிலும் பதியப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள் மற்றும் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களுக்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |