Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

 


2020ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார்.


அப்பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தகுதி பெறும் மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியைப் பெறுவரெனவும் அமைச்சர் தொிவித்துள்ளார்.

இன்று (17) முற்பகல் மல்வத்து அஸ்கிாி தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தொிவிக்கையிலேயே அமைச்சர் இது குறித்து விளக்கமளித்தார்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடாத்த திட்டமிட்டிருப்பதாகவும்,
எதிர்வரும் ஜூன் மாதம் இப்பரீட்சைக்கான பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தொிவித்தார்.

Post a Comment

0 Comments