Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் புனரமைப்பு !


நூருல் ஹுதா உமர்


தேசிய இளைஞர் கழக சம்மேளத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளன நிர்வாக தெரிவுப் புனரமைப்பு கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹியின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.கே. றொசின்தாஜ் மற்றும் அதிதிகளாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ. முபாரக் அலி, அக்கரைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.றுமைஸா, அக்கரைப்பற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பியோத் முஹைமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது 2021 ஆம் ஆண்டுக்கான 21 பேர் கொண்ட நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக கடந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.கே.எஸ். ஊடக வலையமைப்பின் பிரதானி எம்.எம்.றுக்சான்  தெரிவு செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments