(செ.துஜியந்தன் )
கொரோனா தொற்றக்காரணமாக நாட்டில் இடைநிறுத்தப்பட்ட அறநெறிப்பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆலோசணை வழிகாட்டல் கூட்டங்கள் பிரதேச செயலகங்கள் தோறும்
நடைபெற்றுவருகின்றன.
இதற்கமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கல்முனை, பாண்டிருபபு, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய கிராமங்களில் இயங்கும் 16 அறநெறிப்பாடசாலைகளையும் மீள ஆரம்பித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கூட்டம் கல்முனை வடக்கு பிரதெச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜி, கலாசார உத்தியோகத்தர் ரி.பிரபாகரன், இந்துகலாசார உத்தியோகத்தர்களான திருமதி கௌசல்யவாணி, திருமதி சுஜித்திரா உட்பட அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியர்கள், ஆசியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
குல்முனைப் பிரதேசத்தில் அறநெறிப்பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னர் பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாகவும், அறநெறிக்கல்வியின் அவசியம் பற்றியும், அறநெறி மாணவர்களை ஆக்கத்திறன் போட்டிக்கு தயார்படுத்தல் ஆகியன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: