Advertisement

Responsive Advertisement

துறைவந்தியமேடு கிராமத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு விசேட பிரார்த்தனை

 



செ.துஜியந்தன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரு ம் 14 ஆம் திகதி வரை பிரார்த்தனை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து. தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் விசேட பிரார்த்தனை பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.





கல்முனை துறைவந்தியமேடு கிராமத்தின் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ந.கு.பவித்திரன் சர்மா விசேட பூசைவழிபாடு நடைபெற்றது. பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட வழிபாட்டில் ஆலய பிரதான நுழைவாயில் கதவில் பொதுமக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கறுப்பு துணி கட்டினார்கள். சுகாதாரவிதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற வழிபாட்டில் குறைந்தளவு மக்களே கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments