Home » » கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்" திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !

கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்" திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு !


அபு ஹின்ஸா , ஐ.எல்.எம். நாஸிம்  


சீன- இலங்கை நட்புறவின் அடையாளமாக இலங்கையில் அமைந்துள்ள சீனத்தூதரகம் ஊடாக கொழும்பு உட்பட பல மாவட்டங்களையும் சேர்ந்த 2500 தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் மௌலவி மிப்ளால் தலைமையில் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேச மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (18) மாலை அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யு.எல்.என். ஹுதா தலைமையில் நடைபெற்றது.

அல்- மீஸான் பௌண்டஷன் வருடா வருடம் செய்து வரும் இந்த "கல்விக்கு கரம் கொடுப்போம் சிறுவர் தொழிலாளியில்லா இலங்கையை உருவாக்குவோம்" திட்டத்தில் இவ்வருட இந்நிகழ்வில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் கலை, இலக்கிய செயலாளர் கலைஞர் அஸ்வான் மௌலானா, செயற்குழு உறுப்பினர் என்.எம். அலிகான், மாவட்ட ஊடக இணைப்பாளர் ஐ.எல்.எம். நாஸிம் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாடசாலை புத்தக பைகளை வழங்கி வைத்தனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |