Advertisement

Responsive Advertisement

வவுனியாவில் அதிகரித்த கொரோனா தொற்று- பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

 


வவுனியாவில் கொரனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள் எதிர் வரும் திங்கள் கிழமை முதல் மீண்டும் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப் பகுதிகள் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அனேகமான பி.சி.ஆர் பரிசோதனைகளிற்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதுவரை 175 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நகரின் நிலை குறித்து வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அதன்படி நகரின் அனைத்து பாடசாலைகளின் கல்விசெயற்பாடுகளும் எதிர்வரும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நகரில் முடக்கப்பட்டுள்ள சில பகுதிகளையும் திங்கட்கிழமை விடுவிப்பதற்கும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.


Post a Comment

0 Comments