Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கு தொற்று உறுதி...!!

 


மட்டக்களப்பு பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வேவைகள பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவிக்கின்றார்.


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் 79 வயதுடைய முதியோர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபர், தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், சுகாதார தரப்பினரால் RAPID ANTIGEN பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பகுதி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments