தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்ப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இன்று (22) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
புலமைப்பரிசில் தேர்வில் அதிகமான மாணவர்கள் உயர் மதிப்பெண்களை பெற்றிருந்தாலும், 2017 முதல் 2021 வரையிலான ஐந்தாண்டுகளில் மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
பாடசாலைகளில் வகுப்புகளின் எண்ணிக்கையையோ அல்லது ஒரு வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான அனைத்து தகவல்களையும் அமைச்சின் இணையத்தளமான www.moe.gov.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன் பெப்ரவரி 15 முதல் ஒரு மாத காலத்திற்கு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments: